பள்ளி வாகனத்தின் சக்கரம் ஏறியதில் உடல் நசுங்கி ஒன்றரை வயது குழந்தை பலி..!
சேலம் மாவட்டம் ஆத்தூர் அடுத்த லத்துவாடி கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி காசி – சுதா தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். இதில் உள்ள விவேகானந்தா மெட்ரிக் பள்ளியில் எல்கேஜி படித்துவரும் 4 வயது மகளை வழக்கம்போல் பள்ளி வாகனத்தில் ஏற்றி விட சுதா சென்றுள்ளார்.
அப்போது தாயைப் பின்தொடர்ந்து ஒன்றரை வயது குழந்தை பவனிகாஸ்ரீ சாலைக்கு வந்ததாக கூறப்படுகிறது. இதனை குழந்தையின் தாய் கவனிக்காத நிலையில் பள்ளி வாகனம் எதிர்பாராதவிதமாக குழந்தையின் மீது மோதியது.
பள்ளி வாகனத்தின் சக்கரம் ஏறியதில் உடல் நசுங்கி ஒன்றரை வயது குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் குழந்தையின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





