தமிழகத்தின் 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு..!
தமிழகத்தின் 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் என்று கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகப் பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, சேலம், தர்மபுரி மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
நாளை நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்தில் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான வரை மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





