160 மாணவர்களுக்கு இலவச சைக்கிள்களை வழங்கிய ஊராட்சி மன்ற தலைவர்..!
திருவள்ளூர் அருகே அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கையை ஊக்குவிக்கும் வகையில் 160 மாணவர்களுக்கு ஊராட்சி மன்ற தலைவர் இலவச சைக்கிள்களை வழங்கினார்.
உளுந்து கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் மாணவர்களின் சேர்க்கையை ஊக்குவிக்கும் விதமாக ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ் அரசு பள்ளி மாணவிகளுக்கு 160 பேருக்கு 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் விலையில்லா சைக்கிள்களை வழங்கினார். அப்போது அவர் மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என குறிப்பிட்டார்.





