கடுமையாக உயர்த்தப்பட்டுள்ள மின்சார கட்டணம் இன்று முதல் அமல்..!
இலங்கையில் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ள மின்சார கட்டணம் இன்று முதல் அமலுக்கு வருகிறது. பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் இலங்கையில் மின்சார கட்டணத்தை அரசு அதிரடியாக உயர்த்தியுள்ளது.
யூனிட்டுக்கு 75 சதவீதம் அளவுக்கு மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மாதத்துக்கு 30 யூனிட் மின்சாரம் பயன்படுத்தும் குடும்பத்தினர் 298 ரூபாய் அதிகமாக செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த மின் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது.
இந்த கட்டண உயர்வுக்கு இலங்கை மின்சார வாரியம் ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. ஏற்கனவே எரிபொருள் தட்டுப்பாடு அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு மற்றும் விண்ணை முட்டும் விலைவாசி அடுத்து வரும் மக்களுக்கு மின் கட்டண உயர்வு கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது.





