3 கிலோ கஞ்சா விற்பனை செய்த நபர் கைது..!
தூத்துக்குடி அருகே 3 கிலோ கஞ்சா விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்தனர். கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்கிடமாக முதியவர் ஒருவர் நின்று கொண்டு இருந்தார்.
அவரை பிடித்து விசாரித்ததில் அவர் இளைஞர்களுக்கு விற்பனை செய்த 3 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்த 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.





