பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 2 ஆசிரியர்கள்..!
பொள்ளாச்சியில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இரண்டு ஆசிரியர்கள் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டனர். அரசுப் பள்ளி மாணவர்களிடம் பன்னிரண்டாம் வகுப்பு பாடம் நடத்தும் ஆசிரியர் பாலச்சந்திரனை இயற்பியல் ஆசிரியர்கள் இருவர் பாலியல் சீண்டலில் ஈடுபடுவதாகவும் இரட்டை அர்த்தத்தில் பேசுவதாகவும் தொடர்புகொண்டு புகார் அளித்தார்.
நேரில் சென்று விசாரணை நடத்திய குழந்தைகள் நல குழுவினர் ஆசிரியர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் ஆசிரியர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.





