சுற்றுலா வந்த மூன்று சிறுமிகள் கடலில் மூழ்கி உயிரிழப்பு..!
வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்த மூன்று சிறுமிகள் கடலில் மூழ்கி உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற வேளாங்கண்ணி விடுமுறை தினத்தில் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வருவது வழக்கம்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் இருந்து வேளாங்கண்ணிக்கு வந்த 15 பேர் கடலில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது கடல் சீற்றத்துடன் இருந்த நிலையில் சிறுமிகள் சகானா ரிஹானா ஆகியோர் அலையில் அடித்து கொல்லப்பட்டனர்.
அவர்களை மீட்டு நாகை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற பொழுது மூன்று பேரும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். வேளாங்கண்ணியில் கடல் அலையில் சிக்கி 3 சிறுமிகள் ஒரே நேரத்தில் உயிரிழந்தது மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.





