மேற்கு வங்கத்தில் இன்று நடைபெறும் 5ம் கட்டதேர்தல்..!
மேற்கு வங்க மாநிலத்தில் மிகுந்த பரபரப்பான சூழலில் இன்று ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. மேற்குவங்க மாநில சட்டப்பேரவைக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று அறிவிக்கப்பட்டது. இதுவரை நான்கு கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது.
கடந்த 10ஆம் தேதி நடைபெற்ற நான்காம் கட்ட வாக்குப்பதிவு வன்முறை மற்றும் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்ததில் 5 பேர் கொல்லப்பட்டனர். இந்நிலையில் அந்த மாநிலத்தில் 40 தொகுதிகளுக்கான ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
வன்முறை சம்பவங்கள் அரங்கேறியதால் இந்த தேர்தலுக்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேற்குவங்க அரசியல் களம் தொடர்ந்து பரபரப்பாக காணப் படுவதால் ஐந்தாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வழக்கத்திற்கு மாறாக ஒரு நாள் முன்னதாக முடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.






