--- --:--:-- --

கோவை மாவட்ட காவல்துறை மூன்றாவது நாளாக அதிரடி.இ – பாஸ் இல்லாமல் வந்த 53 வாகனங்கள் பறிமுதல் !!!

கோவை மாவட்ட காவல்துறை மூன்றாவது நாளாக அதிரடி.இ – பாஸ் இல்லாமல் வந்த 53 வாகனங்கள் பறிமுதல் !!!

கொரோனா வைரசின் தாக்கம் கோவையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சொந்த ஊர்களுக்கு தங்களது வாகனங்கள் மூலம் திரும்புவதும் அதிகரித்து வருகிறது.இதனை தடுக்கும் பொருட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறை சார்பில் கோவை மாவட்ட,மாநில எல்லைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

 

அதன் ஒருபகுதியாக கோவை,திருப்பூர் மாவட்டங்கள் சந்திக்கும் கருமத்தம்பட்டி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச்சாவடியில் வாகனங்கள் முழுமையாக தணிக்கை செய்யப்பட்டு அனுமதிக்கப்பட்டு வருகிறது.

 

கோவை மாவட்டத்தில் மேற்கு மண்டல காவல் துறை தலைவர் பெரியய்யா,கோவை சரக காவல் துறை துணைத் தலைவர் கார்த்திகேயன் ஆகியோரின் வழிகாட்டுதலின் பேரில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார்அவர்கள் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள அனைத்து மாநில மற்றும் மாவட்ட எல்லைகளில் அமைந்துள்ள சோதனைச் சாவடிகளிலும்
வாகன சோதனையை தீவிரப்படுத்த உத்தரவிட்டுள்ளதை தொடர்ந்து கடந்த 21.06.2020 ஆம் தேதி 25 வாகனங்களும், 22.06.2020 ஆம் தேதி 54 வாகனங்களும் தேதி இ-பாஸ் இல்லாமல் கோவை மாவட்டத்திற்குள் நுழைய முற்பட்டதற்காகவும்,அனுமதிக்கப்பட்ட நபர்களுக்கு மேல் அதிகப்படியான நபர்களை ஏற்றி வந்த காரணத்திற்காக பறிமுதல் செய்யப்பட்டது.

 

3 ஆம் நாளான இன்றும் தெக்கலூர் எஸ். பி.அப்பரல்ஸ், கஞ்சபள்ளி, வாளையார், காங்கேயம்பாளையம், கோபாலபுரம் உள்ளிட்ட இடங்களில் அமைந்துள்ள சோதனை சாவடிகள் வழியாக இ – பாஸ் இல்லாமல் மாவட்டத்திற்குள் நுழைய 19 நான்கு சக்கர வாகனங்கள்,16 இரண்டு சக்கர வாகனங்கள்,விதிமுறைகளை மீறி அதிகப்படியான நபர்களை ஏற்றி வந்த 18 நான்கு சக்கர வாகனங்கள் மொத்தம் 53 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

 

இதுகுறித்து காவல் துறை சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் பொது மக்கள் இ – பாஸ் இல்லாமல் கோவை மாவட்டதிற்குள் நுழையும் முயற்சியில் ஈடுபட்டு இன்னல்களுக்கு ஆளாக வேண்டாம் என கோவை மாவட்ட காவல் துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon