--- --:--:-- --

இளைஞர் கொலை வழக்கில் மேலும் 5 பேர் கைது..!

1

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அஸ்வின் குமார் எனும் இளைஞர் தலை துண்டிக்கப்பட்டும் இரு கைகள் வெட்டப்பட்டும் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.

 

சோழபுரத்தை அடுத்த பெருங்காவல் மைதானத்தில் துண்டிக்கப்பட்ட தலை வீசப்பட்டது. இந்த வழக்கில் அஜித் என்கிற ரோஜா என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

 

அந்த நபரிடம் நடத்திய விசாரணையில் தனது உறவுக்கார பெண்ணை திருமணம் செய்வதாக கூறி அஸ்வின் குமார் ஏமாற்றியதால் கொலை செய்ததாக கூறி வாக்குமூலம் அளித்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

 

இதனிடையே அஸ்வின் குமார் கொலை வழக்கில் தொடர்புடைய ஜெயக்குமார், மோகன், கார்த்திக், தேவராஜ், மனு ஆகிய ஐந்து நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

 

Right Menu Icon