கோவிஷீல்ட் தடுப்பூசியால் அரிதான பக்க விளைவு..!
கோவிஷீல்டு தயாரித்த நிறுவனம் தனது கொரோனா தடுப்பூசி மிக மிக அரிதாக சிலருக்கு பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என இங்கிலாந்து உயர்நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டுள்ளது.
அஸ்ட்ரோஜெனக்கா நிறுவனமும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகமும் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பூசி இந்தியாவில் பல்வேறு நாட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டது. இந்த சூழலில் அந்த நிறுவனத்தின் தடுப்பூசியால் கடுமையான பாதிப்புகளும் உயிரிழப்புகளும் ஏற்ப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டி இங்கிலாந்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் ஆவணம் ஒன்றை தாக்கல் செய்த நிறுவனம் தங்கள் கொரோனா தடுப்பூசியால் மிக மிக அரிதாக சிலருக்கு டிடிஎஸ் என்ற ரத்தம் உறைதல் மற்றும் ரத்த தட்டுகள் குறைதல் போன்ற பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளதாக ஒப்பு கொண்டுள்ளது.





