ரேஷன் கடைகளுக்கு இந்த மாதம் 5 நாள்கள் விடுமுறை..!
இந்த மாதத்தில் (ஜூன்) ரேஷன் கடைகளுக்கு 5 நாள்கள் விடுமுறை ஆகும். வழக்கம்போல மாதத்தில் முதல் 2 வெள்ளிக்கிழமைகளும் ரேஷன் கடைகள் மூடப்பட்டு இருக்கும்.
அதேபோல், 3-வது மற்றும் 4-வது வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை ரேஷன் கடைகளுக்கு விடுமுறை ஆகும். இதுதவிர்த்து, வரும் 7-ம் தேதி பக்ரீத் பண்டிகை வருவதால் அன்றும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த மாதம் ரேஷன் கடைகளுக்கு 5 நாள்கள் விடுமுறை ஆகும்.





