9 வயது சிறுவனுக்கு கொரோனா..!
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று வேகமெடுத்துள்ளது. இந்தச் சூழலில் சென்னை பள்ளிக்கரணையை சேர்ந்த 9 வயது சிறுவனுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதையடுத்து சிறுவனை வீட்டிலேயே தனிமைப்படுத்தும்படி டாக்டர்கள் குடும்பத்தினரிடம் வலியுறுத்தியுள்ளனர்.
அதன்படி வீட்டில் உள்ள அறையில் தனியே வைத்து சிறுவனின் உடல்நலத்தை பெற்றோர் கவனித்து வருகின்றனர்.





