குன்னத்தூரில் தேசியக் கொடி ஊர்வலம்..!
ஆபரேஷன் சிந்தூர் வெற்றியை தொடர்ந்து, இந்திய ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, இன்று காலை 12 மணியளவில், திருப்பூர் மாவட்ட பாஜக சார்பில், குன்னத்தூர் அரசு மருத்துவமனையில் இருந்து, பஸ் நிலையம் வழியாக, காமராஜர் சிலை வரை, தேசியக்கொடி ஊர்வலம் நடந்தது.
இதில் அனைத்து கட்சியினர், பொதுமக்கள், மாணவ மாணவிகள், விவசாயிகள் பெண்கள் என திரளாக கலந்து கொண்டனர்.





