--- --:--:-- --

வேளாண் கூட்டுறவு வங்கியில் முறைகேடு திமுக நிர்வாகி உட்பட 4 பேர் கைது..!

1

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே ஆயூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் 16 லட்சம் ரூபாய் முறைகேட்டில் ஈடுபட்ட திமுக நிர்வாகி உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

 

கூட்டுறவு வங்கியில் கடந்த 2022 – 2023 ஆண்டில் பயிர் கடன்கள் வழங்கியதில் முறைகேடு நடத்திருப்பதாக வாடிக்கையாளர்கள் போராட்டம் நடத்தினர். இதைத்தொடர்ந்து வங்கி கணக்குகள் தணிக்கை செய்யப்பட்டு முறைகேடு உறுதி செய்யப்பட்ட நிலையில் வங்கி தலைவர் அறிவழகன் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார்.

 

அதைத் தொடர்ந்து வங்கியின் கூட்டுறவு சங்க துணை பதிவாளர் அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் 16 லட்சம் ரூபாய் முறைகேடு செய்யப்பட்டு இருப்பதை கண்டறிந்தனர்.

 

திமுக நிர்வாகி, அறிவழகன், எழுத்தர்கள் ஆறுமுகம், இளையராஜா, செயலாளர் ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் சிறையில் அடைத்தனர்.

 

Right Menu Icon