தேர்தலையோட்டி தேமுதிக சார்பில் வரும் 30 ஆம் தேதி ஆலோசனை!
தேமுதிக சார்பில் சட்டமன்ற தேர்தலுக்காக புதியதாக நியமிக்கப்பட்ட மண்டல பொறுப்பாளர்கள், மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்கள், தொகுதி பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் வரும் 30-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.







