--- --:--:-- --

சிறுவனை ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுத்திய 4 மாணவர்கள் கைது..!

5

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் மூன்றாம் வகுப்பு மாணவனை ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுத்தி துன்புறுத்தியதாக 4 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மூன்றாம் வகுப்பு படிக்கும் சிறுவனின் ஆசனவாயில் வீக்கம் இருந்துள்ளது.

 

அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது சிறுவன் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. அதிர்ந்து போன அவரது தாய் சிறுவனிடம் விசாரிக்க 4 மாணவர்கள் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக இந்த சிறுவனை ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுத்தியது தெரியவந்தது.

 

இது தொடர்பான புகாரின் 17 வயதிற்குட்பட்ட நான்கு மாணவர்களை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் போலீசார் அடைத்துள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon