வாட்ஸ் அப், மெசஞ்சர்க்கு பதிலாக மாற்று செயலிகளை பயன்படுத்தும் பயங்கரவாதிகள்..!
பாகிஸ்தானை பூர்வீகமாகக் கொண்ட பயங்கரவாத குழுக்கள் வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக் மெசஞ்சர் க்கு மாற்றாக புதிய செய்திகள் மூலம் தகவல்களை பரிமாறிக் கொள்வதாக பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து அங்கு 3ஜி மற்றும் 4ஜி சேவைகள் தடை செய்யப்பட்டு 2ஜி சேவை மட்டும் வழங்கப்படுகிறது.
இதையடுத்து குறைந்த இன்டர்நெட்டில் செயல்படக்கூடிய மூன்று வெளிநாட்டு செயலிகள் மூலம் பாகிஸ்தானிலுள்ள தங்கள் தலைமைக்கு தகவல்களை அளித்து வருவதாக பாதுகாப்பு படைகளால் கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகள் தெரிவித்துள்ளனர்.







