--- --:--:-- --

காவல் உதவி ஆய்வாளர் வீட்டில் அடுத்தடுத்து 3 பெட்ரோல் குண்டுகள் வீச்சு..!

3

சீர்காழி காவல் உதவி ஆய்வாளர் வீட்டில் மூன்று பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதில் காயமடைந்த எஸ்எஸ்ஐ கணேசனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காவல் நிலையத்தில் கணேசன் என்பவர் காவல் சிறப்பு உதவியாளராக பணியாற்றி வருகிறார்.

 

நேற்று இரவு எஸ்எஸ்ஐ கணேசன் வீட்டில் மர்ம நபர்கள் அடுத்தடுத்து மூன்று பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளார். இதற்காகவே சிறப்பு ஆய்வாளரின் காலில் தீக்காயம் ஏற்பட்டது. அவருக்கு உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

இந்த தாக்குதல் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவலர்கள் பெட்ரோல் குண்டு வீசியவரை தேடி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் முன் விரோதம் காரணமாக பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

 

Right Menu Icon