--- --:--:-- --

தமிழ்நாட்டில் 25 சுங்கச் சாவடிகளில் கட்டண உயர்வு..!

1

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் சுங்கச்சாவடிகள் உள்ளன.தமிழகத்தில் மொத்தம் 67 சுங்கச்சாவடிகள் உள்ளன. இந்த சுங்கச் சாவடிகளில் ஆண்டுதோறும் ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்கள் என இருமுறை கட்டணம் மாற்றி அமைக்கப்படுகிறது.

 

இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தல் காரணமாக இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கட்டணம் உயர்த்தப்படவில்லை. அதற்கு மாறாக ஜூன் மாதம் 36 சுங்கச் சாவடிகளில் கட்டணம் மாற்றியமைக்கப்பட்டது. அதன்படி 5 சதவீதம் வரை சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டது.

 

இதற்கிடையே, தேர்தல் நடந்து முடிந்த நிலையில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கடந்த ஜூன் மாதம் சுங்கக் கட்டணத்தை உயர்த்தியது. கடந்த ஜூனில் தமிழ்நாட்டில் 36 சுங்கச் சாவடிகளில் கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டு 5% வரை கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டது.இ

 

ந்நிலையில், தமிழ்நாட்டில் 25 சுங்கச் சாவடிகளில் ரூ.5 அதிகப்பட்சம் ரூ.150 வரை சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.ஒருமுறை பயணம் செய்வது மற்றும் அதே நாளில் திரும்பி வருவதற்கான சுங்கக்கட்டணம் ரூ.5 முதல் ரூ.20 வரையிலும், மாதாந்திர சுங்கக்கட்டணம் ரூ.100 முதல் ரூ.400 வரையும் உயர்த்தப்பட்டுள்ளது.

 

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி, உளுந்தூர்பேட்டை, திருச்சி சமயபுரம், ஸ்ரீபெரும்பதூர் உள்ளிட்ட சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

Right Menu Icon