--- --:--:-- --

பூண்டி, அம்மாபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் புதிய தலைவர் தேர்வு..!

13

பூண்டி, அம்மாபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறு கூட்டமைப்பு புதிய தலைவராக  டைலர் ஈஸ்வரி தேர்வு செய்யப்பட்டார்.

 

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு, தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளின் முன்னேற்றத்திற்காகவும், நம் பள்ளி குழந்தைகளின் தரமான கல்வியை உறுதி செய்திடவும், அரசு பள்ளிகளை மேம்படுத்தவும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு  பள்ளி மேலாண்மை குழு (எஸ்.எம்.சி. ) அமைக்கப்பட்டு செயல்படுத்தி வருகிறது.

 

2 ஆண்டுகள் கடந்த நிலையில்  எஸ். எம். சி என்னும் பள்ளி மேலாண்மை குழுவை மறுகட்டமைப்பு செய்து புதிய உறுப்பினர்களை தேர்வு செய்து நியமிக்க தமிழக அரசு உத்தரவிட்டது.

 

 

இதனை தொடர்ந்து திருப்பூர், திருமுருகன்பூண்டி நகராட்சி அம்மாபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்  பள்ளியில் நேற்று காலை பள்ளி மேலாண்மை குழு மறுகூட்டமைப்பு கூட்டமும், புதிய தலைவர் மற்றும் புதிய உறுப்பினர்களுக்கான தேர்தலும்  பள்ளி வளாகத்தில்   நடந்தது. நிகழ்ச்சிக்கு   பள்ளி மேலாண்மை குழு ஒருங்கிணைப்பாளரும், தலைமையாசிரியருமான  ராமகிருஷ்ணன் தலைமை தாங்கி வரவேற்று பேசினார்.

 

 

ஆசிரியை புவனேஸ்வரி பள்ளி மேலாண்மை குழு குறித்தும், தேர்ந்தெடுக்கும் முறை குறித்தும் விளக்கி பேசினார். வட்டார எஸ்.எம்.சி கருத்தாளர் இந்துமதி மேற்பார்வையாளராக செயல்பட்டார்.

 

இறுதியில் அம்மாபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மேலாண்மைக் குழுவின் ஒருங்கிணைப்பாளராகராமகிருஷ்ணன், புதிய தலைவராக ஈஸ்வரி, துணைத் தலைவராக விஜயலட்சுமி, ஆசிரியர் பிரதிநிதியாக முத்துக்குமார்,  பெற்றோர் பிரதிநிதிகளாக சஃபியுல்லா, செல்வ புவனேஸ்வரி, சுதா, கார்த்திகா, முத்துமணி, ஜோதி, சரஸ்வதி, அமுதா, கீர்த்திகா, ஞானசெளந்தரி,  ரமேஷ், புவனேஸ்வரி,   உள்ளாட்சி பிரதிநிதிகளாக பூண்டி நகராட்சி 25 வது வார்டு  கவுன்சிலர் பாரதி, 27 வது வார்டு கவுன்சிலர் வளர்மதி,  இல்லம் தேடி  கல்வியாளர் பிரதிநிதியாக காளியம்மாள், சுய உதவி குழு உறுப்பினர்  பிரதிநிதியாக தனலட்சுமி, , முன்னாள் மாணவர் பிரதிநிதியாக  சரவணன், பெற்றோர் அல்லாத முன்னாள் மாணவர் பிரதிநிதியாக  ராமலிங்கம்  ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு பதவி ஏற்றனர்.

 

புதிய உறுப்பினர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. பின்னர் அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.  முடிவில் பள்ளி  ஆசிரியை கவிதா  நன்றி கூறினார். கடந்த 2022 – 24 ஆம் ஆண்டு தலைவராக இருந்த லேடீஸ் டைலர் ஈஸ்வரியே 2024 – 26 ஆண்டு தலைவராக தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

கூட்டத்தில் முன்னாள் பேரூராட்சி கோபால், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் பாஸ்கர சேதுபதி, முன்னாள் மாணவர் அமைப்பு நிர்வாகிகள் காமராஜ், பாலசுப்பிரமணியம், மூர்த்தி, வெங்கடாச்சலம், கிருஷ்ணமூர்த்தி,  உள்பட அம்மாபாளையம் ஊர் முக்கிய பிரமுகர்கள், பெற்றோர்கள் ஆர்வமாக  திரளாக கலந்து கொண்டனர்.

Right Menu Icon