--- --:--:-- --

தவெக கல்வி விருது விழா திடீர் ஒத்திவைப்பு ஏன்?

4

தவெக சார்பில் இன்று நடக்க இருந்த கல்வி விருது விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கல்வி விருது விழாவுக்கு சிறப்பு விருந்தினராக ராகுல் காந்தியை முதலமைச்சர் விஜய் அழைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.2023-ஆம் ஆண்டு முதல் சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் 3 இடங்களை பெற்ற மாணவர்களுக்கு தவெக சார்பில் ஊக்கத் தொகையுடன், கல்வி விருதும் வழங்கப்பட்டு வருகிறது.

 

அந்த வகையில், கடந்த பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு தவெக சார்பில் சென்னை நீலாங்கரையில் உள்ள கன்வென்ஷன் சென்டரில் கடந்த 4ஆம் தேதி முதல்கட்ட கல்வி விருது வழங்கும் விழா நடைபெற்றது. அதில், தவெக தலைவரும் முதலமைச்சருமான விஜய் கலந்துகொண்டு மாணவர்க்ளுக்கு சான்றிதழ் வழங்கினார்.

 

 

இந்நிலையில், 2வது கட்ட கல்வி விருது விழா இன்று சென்னை நீலாங்கரையில் நடைபெற இருந்த நிலையில், திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கும் அமைச்சர் ஆனந்த் டெல்லி சென்றதால் விழா ஒத்திவைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

 

 

அதேநேரம், சோனியா காந்தி புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள டெல்லி சென்ற முதலமைச்சர் விஜய், கல்வி விருது விழாவுக்கு சிறப்பு விருந்தினராக ராகுல் காந்தியை அழைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது. ராகுல் காந்தியின் நேர ஒதுக்கீடு காரணமாக விழா ஒத்திவைக்கப்பட்டதாகவும், விரைவில் விருது விழா அறிவிக்கப்பட்டு அதில் ராகுல் காந்தி கலந்து கொள்ளலாம் என கூறப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon