அரசு ஊழியர்களுக்கு ரூ.1,000 வரை சம்பள உயர்வு..!
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், விலைவாசி உயர்வை ஈடுசெய்யும் வகையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 65 லட்சத்திற்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்களும் இதன் மூலம் நேரடியாகப் பயனடைவார்கள். இந்த உயர்வு, 7-வது மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டு உயர்த்தப்பட்டுள்ளது.
அகவிலைப்படி (Dearness Allowance – DA) என்பது விலைவாசி உயர்வை (Inflation) ஈடுகட்டுவதற்காக அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் வழங்கப்படும் ஒரு கூடுதல் கொடுப்பனவு ஆகும். மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி வழக்கமாக ஆண்டுக்கு இருமுறை மாற்றியமைக்கப்படுவது நடைமுறை. அதன்படி, ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வரவேண்டிய திருத்தப்பட்ட அகவிலைப்படி குறித்த அறிவிப்பு மார்ச் மாதத்திலும், ஜூலை 1 முதல் அமலாக வேண்டிய அறிவிப்பு செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்திலும் வெளியாகும்.
அடிப்படை ஊதியம் ரூ.18,000 கொண்ட ஊழியர்களுக்கு மாதம் ரூ.360-ம், ரூ.50,000 அடிப்படை ஊதியம் கொண்டவர்களுக்கு ரூ.1,000-ம் கூடுதலாகக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




