ஐகோர்ட்டில் முதன்மை மொழியாக தமிழ் – தி.மு.க. வழியில் த.வெ.க தனித் தீர்மானம்
கடந்த 2006-ல் கருணாநிதி, 2024-ல் மு.க.ஸ்டாலின் ஆகியோர் ஆட்சியில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை முதன்மை மொழியாக கொண்டு வர தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அன்று தி.மு.க. கொண்டு வந்த இந்த தனித் தீர்மானத்தை எதிர்கட்சியாக இருந்த அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் முழுமனதாக ஆதரவு அளித்து ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அந்த வரிசையில், தற்போது நவீன தொழில்நுட்ப வளர்ச்சி, மற்றும் ஏ.ஐ. வசதிகளின் துணையோடு, தமிழுக்கான உரிமையை நிலைநாட்ட, முதல்வர் விஜய் தலைமையிலான அரசு தமிழ் முதன்மை மொழி தொடர்பான தனித் தீர்மானத்தை கொண்டுவர உள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




