ஒரே நாளில் 67 டாஸ்மாக் பணியாளர்கள் சஸ்பெண்ட்!
மதுபாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வசூலித்ததாக எழுந்த புகாரில், ஒரே நாளில் 67 டாஸ்மாக் பணியாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். கடந்த திங்கட்கிழமையன்று சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் விக்னேஷ், டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்ட பின்னரும், கூடுதல் பணம் வசூலிப்பது தொடர்ந்ததால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தார்.
அதாவது, முதல் முறை தவறு செய்து கண்டறியப்பட்டால் 3 மாதங்கள் தற்காலிக பணிநீக்கமும், மீண்டும் அதே நபர், அடுத்த முறையும் அதே தவறு செய்தால் நிரந்தர பணிநீக்கம் செய்யப்படுவார்கள் எனவும் கூறியிருந்தார்.
இந்த நிலையில், சென்னை, கோவை, திருச்சி, மதுரை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் கூடுதலாக பணம் வசூலித்ததாக எழுந்த புகாரில், டாஸ்மாக் விற்பனையாளர்கள், உதவியாளர்கள் என மொத்தம் 67 பேர் மீது அமைச்சர் விக்னேஷ் நடவடிக்கை எடுத்துள்ளார். அமைச்சரின் எச்சரிக்கையை மீறி செயல்பட்டதாக, ஒரே நாளில் 67 டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




