முதலீட்டாளர்களை ஈர்க்க தமிழ்நாடு அரசின் மாஸ் மசோதா..!
மாநிலத்தில் முதலீடுகளை எளிதாக்கவும், தொழில் செய்வதை மேலும் சுலபமாக்குவதை நோக்கமாக கொண்டு ‘தமிழ்நாடு முதலீட்டு ஊக்குவிப்பு ஆணையத்தை’ அமைப்பதற்கான மசோதாவை தொழில் துறை அமைச்சர் எஸ். கீர்த்தனா புதன்கிழமை அறிமுகப்படுத்தினார்.
தலைமைச் செயலாளர் தலைமையில் இயங்கும் இந்த ஆணையம், காடு மற்றும் நிலம், நகர அமைப்பு, தீயணைப்புப் பாதுகாப்பு, பொதுச் சுகாதாரம் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் தொடர்பான 22 மாநில சட்டங்களை ஒரே பொதுவான முதலீட்டு வசதி கட்டமைப்புக்குள் கொண்டு வரும். முன்மொழியப்பட்டுள்ள இந்த ஆணையம், ரூ.200 கோடி அல்லது அதற்கு மேற்பட்ட முதலீடுகள், குறைந்தபட்சம் 5,000 வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திட்டங்கள், தாராள வர்த்தக ஒப்பந்தங்களுடன் தொடர்புடைய திட்டங்கள் மற்றும் புலம்பெயர்ந்த தமிழ்நாட்டினரின் முதலீடுகள் உள்ளிட்ட பெரிய, மூலோபாய மற்றும் அதிக தாக்கம் ஏற்படுத்தும் முதலீடுகளுக்கு வசதிகளைச் செய்து தரும்.
“CRPF ஆபீசரோட பர்னிச்சர்னு சொல்லி ஏமாத்திட்டாங்க…” தொழில் துறைச் செயலாளர் இந்த ஆணையத்தின் உறுப்பினர் ஒருங்கிணைப்பாளராக செயல்படுவார். இதில் 20 உறுப்பினர்கள் வரை இடம்பெறுவர். ஐந்து முதலீடு அல்லது தொழில் துறை நிபுணர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்படலாம். இந்த மசோதாவின்படி, மாநில நோடல் ஏஜென்சிகள், ஒற்றைச் சாளரக் குழுக்கள் மற்றும் அரசு துறைகளுக்கு இந்த ஆணையம் பிறப்பிக்கும் உத்தரவுகள் கண்டிப்பாகக் கட்டுப்படுத்தக் கூடியவையாக இருக்கும். தொழில்துறை பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்டும், மேம்படுத்தப்படாமல் இருக்கும் தொழிற்துறை நிலங்களையும் இந்த ஆணையம் ஆய்வு செய்யும். சிப்காட், டிட்கோ, சிட்கோ, தாஹ்ட்கோ மற்றும் எல்காட் உள்ளிட்ட பிற மாநில முகமைகளால் ஒதுக்கப்பட்ட நிலங்களின் பயன்பாட்டையும் இது ஆய்வு செய்யும்.
ஒழுங்குமுறை ஒப்புதல்களுக்கான காலக்கெடுவை ஒழுங்குபடுத்தவும் இந்த மசோதா முன்மொழிகிறது. மாநில சட்டங்கள் அல்லது துணை சட்டங்கள் 21 நாட்களுக்கு மேலான காலவரம்பை நிர்ணயித்திருந்தாலோ, அல்லது காலக்கெடுவைக் குறிப்பிடாமல் இருந்தாலோ, ஒப்புதல் அளிக்கும் காலம் பொதுவாக 21 நாட்களாக குறைக்கப்பட்டதாகக் கருதப்படும். இருப்பினும், இந்த விதி மத்தியச் சட்டத்தின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட நீண்ட காலக்கெடுவை மீறாது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





