ரேஷன் கடைகளில் நம்பர் 1 தரமுள்ள அரிசி கொடுப்போம் – எடப்பாடி பழனிசாமி
சேலம் மாவட்டம் சங்ககிரி தொகுதியில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அதிமுக ஆட்சி அமைந்தவுடன், மளிகைக் கடைகளில் கிடைக்கும் தரத்தில் உயர்தரமான அரிசி ரேஷன் கடைகளிலும் வழங்கப்படும் என அவர் உறுதியளித்தார்.
இனி பொதுமக்கள் தனியாக கடைக்கு சென்று அரிசி வாங்க வேண்டிய அவசியமே இருக்காது என்றும், ரேஷன் கடைகளில் ‘நம்பர் 1’ தரமுள்ள அரிசி வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். இதற்காக எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் செலவானாலும் தயங்கமாட்டோம் என்றும், ஏழை மக்களின் நலனை முன்னிறுத்தும் இந்த திட்டத்தை அதிமுக கட்டாயமாக நிறைவேற்றும் எனவும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




