--- --:--:-- --
selvaraj

பிரசாரத்துக்கு நடுவே, திமுக தலைமையின் உத்தரவுப்படி, மசோதா நகலை எரித்து போராட்டம் செய்த செல்வராஜ்.

பல்லடம்: தேர்தல் பிரசாரம் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பல்லடம் தொகுதி திமுக வேட்பாளர் செல்வராஜ், முதலிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது மத்திய அரசின் சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் நடத்திய போராட்டம் தொகுதி மக்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

முதலிபாளையம் ஊராட்சி ஹவுசிங் யூனிட் பகுதியில் பிரசாரம் மேற்கொண்டபோது, ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள தொகுதி மறுசீரமைப்பு சட்ட திருத்த மசோதாவிற்கு வேட்பாளர் செல்வராஜ் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். தமிழகத்தின் பிரதிநிதித்துவத்தைப் பாதிக்கும் வகையில் இந்த மசோதா அமைந்துள்ளதாகக் கூறி, அதன் நகலை பொதுவெளியில் தீயிட்டு எரித்து தனது கண்டனத்தைப் பதிவு செய்தார். இந்த அதிரடி போராட்டத்தால் அப்பகுதியில் அரசியல் பரபரப்பு நிலவியது.

 

செல்வராஜ்
பிரசாரத்தின்போது தனக்கு வரவேற்பு தந்த குழந்தையை தூக்கி மகிழ்ந்தார் செல்வராஜ்.

முன்னதாக, முதலிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட எம்.ஜி.ஆர். நகர் பகுதிக்கு வந்த வேட்பாளருக்கு, பொதுமக்கள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளித்தனர். பெண்கள் ஆரத்தி எடுத்தும், பூரண கும்ப மரியாதையுடனும் தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர். மக்களின் இந்த எழுச்சிமிகு வரவேற்பை ஏற்றுக் கொண்ட செல்வராஜ், உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து தங்களை மீண்டும் வெற்றிபெறச் செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து, அவர் செம்மாண்டம்பாளையம், வட்டக்காட்டுபுதூர், வெள்ளக்கரடு, சிட்கோ மெயின் கேட், அ.பெரியபாளையம், பொன்னாபுரம், பொன்னாபுரம் சர்ச் பகுதி, மாணிக்காபுரம் மற்றும் முதலிபாளையம் கிராமம் எனப் பல்வேறு பகுதிகளில் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டார்.

ஒவ்வொரு பகுதியிலும் வீதி வீதியாகச் சென்ற அவர், திமுக அரசின் மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளை எடுத்துரைத்து தீவிரமாக வாக்கு சேகரித்தார். இந்த பிரசாரத்தின் போது கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெருமளவில் கலந்து கொண்டு உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பி ஆதரவு திரட்டினர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon