கோவை மதுக்கரை அருகே மலேசிய சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தாக்குதலில் காயமடைந்தவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்தில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விசாரணை நடத்தி வருகிறார்.