--- --:--:-- --

ஏப். 18-ல் தமிழகத்தில் 3 இடங்களில் ராகுல் பிரசாரம்..!

9

மிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஏப். 18 ஆம் தேதி தமிழகம் வரவிருக்கிறார். ஏப். 18 அன்று தமிழகம் வரும் ராகுல் காந்தி, காலை பொன்னேரி, பிற்பகலில் சோளிங்கர் மற்றும் துறையூரில் நடைபெறும் பொதுக் கூட்டங்களில் பங்கேற்கவிருப்பதாகவும் அதைத் தொடர்ந்து ஏப். 20 ஆம் தேதியும் ராகுல் காந்தி தமிழகம் வரவிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

அதேபோல காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, வருகிற ஏப். 19 ஆம் தேதி நெல்லையிலும் ஏப். 20 ஆம் தேதி கன்னியாகுமரியிலும் பிரசாரம் செய்யவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 28 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon