தேமுதிக போட்டியிடும் 10 தொகுதிகளின் வேட்பாளர் பட்டியல் வெளியீடு..!
திமுக கூட்டணியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விருத்தாசலம் தொகுதியில் போட்டியிடுகிறார். தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் 28 தொகுதிகளிலும், தேமுதிக 10 தொகுதிகளிலும், விசிக 8 தொகுதிகளிலும், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் தலா 5 தொகுதிகளிலும், மதிமுக 4 தொகுதிகளிலும், இந்தியன் முஸ்லிம் லீக் கட்சி 2 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளன.
திமுக வேட்பாளர்கள் 164 தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மேலும் கூட்டணி கட்சிகள் சில திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் 11 தொகுதிகளில் போட்டியிட உள்ளன. இதனால் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் திமுகவின் உதயசூரியன் சின்னம் 175 தொகுதிகள் களம்காண உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்நிலையில் திமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ள 10 தொகுதிகளின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
தேமுதிக வேட்பாளர்கள் பட்டியல்
1) விருதாச்சலம் – பிரேமலதா விஜயகாந்த்
2) விருதுநகர் – விஜயபிராபகரன்
3) தர்மபுரி – டாக்டர் இளங்கோவன்
4)குடியாத்தம் ( தனி ) – பிரதாப்
5)சேலம் மேற்கு – அழகாபுரம் மோகன்ராஜ்
6) போளூர் – சரவணன்
7)பல்லாவரம் – அனகை முருகேசன்
8)திருத்தணி – D.கிருஷ்ணமூர்த்தி
9)ஓமலூர் – A.R.இளங்கோவன்
10)மைலம் – எல்.வெங்கடேஷன்





