--- --:--:-- --

திருவாடானை சினேகவல்லிபுரத்தில் உள்ள ஸ்ரீ மழை தரும் முத்துமாரியம்மன் கோவில் ஆடிமாத உற்சவ விழா நடைபெற்றது!

9.1

திருவாடானை சினேகவல்லிபுரத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ மழை தரும் முத்துமாரியம்மன் கோவில் ஆடிமாத உற்சவ விழா கடந்த 22ம் தேதி காப்பு கட்டப்பட்டது.  அது முதல் தினமும் ஸ்ரீ மழைதரும் முத்து மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது.

திங்கள் கிழமை இரவு அக்கினி சட்டி எடுத்து ஊர்வலமாக வந்து வழிபட்டனர்.  அதனை தொடர்ந்து இன்று பக்தர்கள் விரதம் இருந்து பால்குடம் எடுத்தாலும் தொடர்ந்து வெயில் காவடி எடுத்து வீதி உலா வந்து கோவில் முன்பாக அமைக்கப்பட்டிருந்த  பூக்குழியில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து பக்தர்கள் கொண்டு வந்த பாலால் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. அதன் பிறகு சினேகவல்லிபுரம் இளைஞர்களால் அண்ணதானம் நடைபெற்றது. இரவு பக்தர்கள் பூ தட்டு எடுத்து வீதி வரும் நிகழ்வு நடைபெறும். இரவு கலை நிகழ்ச்சி நடைபெறும். ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மன் அருள்பெற்றுச் சென்றனர்

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon