--- --:--:-- --

கொடைக்கானல் செல்ல புதிய புறவழிச்சாலை வேண்டும்: பழனி எம்.எல்.ஏ ரவி மனோகரன் கோரிக்கை

7

மிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய பழனி தொகுதி எம்.எல்.ஏ ரவி மனோகரன், பிரபல சுற்றுலாத் தலமான கொடைக்கானலுக்குச் செல்வதற்குப் புதிய புறவழிச்சாலை (Bypass road) அமைத்துத் தர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.

 

கொடைக்கானல் செல்ல தற்போது பயன்பாட்டில் இருக்கும் சாலையானது, நூறு ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர் காலத்தில் அன்றிருந்த குறைந்த அளவிலான வாகன எண்ணிக்கையைக் கணக்கில் கொண்டு அமைக்கப்பட்டதாகும் எனச் சுட்டிக்காட்டிய அவர், தற்போதைய நவீன சூழலில் பெருமளவில் அதிகரித்துள்ள வாகனப் போக்குவரத்திற்கு இந்த பழைய சாலை போதுமானதாக இல்லை என்றும், கடுமையான போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க புதிய புறவழிச்சாலை திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்றும் பேரவையில் வலியுறுத்தினார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon