இன்று 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்..!
நீலகிரி மாவட்டத்திற்கு நாளையும் நாளை மறுநாளும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருநெல்வேலி, தேனி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை, நீலகிரி, தென்காசி மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், அடுத்த ஒரு வாரத்திற்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக, கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேபோல், திருநெல்வேலி, தேனி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் எனவும் கணித்துள்ளது.
மேலும், நீலகிரி மாவட்டத்தில் நாளையும், நாளை மறுநாளும் அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், கோவை, நெல்லை, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் நாளை மிக கனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது. சென்னையில் இடி மின்னலுடன் மிதமான மழை நீடிக்க வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.
மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தாலும், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




