ராணுவ தளவாடங்களை குறி வைத்து இஸ்ரேல் தாக்குதல்..!
ஈரானின் அணு ஆயுத நிலைகளை குறி வைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலால் அங்கு அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பை குறி வைத்து கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. ஹமாஸிற்கு ஆதரவாகவும் ஈரான் செயல்படும் நிலையில், அந்நாட்டில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பும் இஸ்ரேலுக்கு எதிராக அவ்வப்போது தாக்குதல் நடத்தி வந்தது.
இந்நிலையில், ஈரானின் அணு ஆயுத கொள்கை தொடர்பான அமெரிக்காவின் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில், ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதலை தொடுத்துள்ளது. ஈரானின் அணு ஆயுத முகாம் மற்றும் ராணுவ தளவாடங்களை குறி வைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.ஈரான் தலைநகர் டெஹ்ரானிலும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இஸ்ரேலில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இஸ்ரேல் தற்காப்பிற்காக இத்தாக்குதலை தன்னிச்சையாக தொடுத்திருப்பதாக அமெரிக்க விளக்கம் அளித்துள்ளது. இஸ்ரேலின் தாக்குதலுக்கும் அமெரிக்காவிற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




