வைகை ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்..!
வைகை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் அணை வேகமாக நிரம்பி வருவதால் வைகை ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ கூடாது என்று மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.
தேனி ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையில் உள்ள நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர் மழையால் 71 அடி உயரம் உள்ள வைகை அணை வேகமாக நிரம்பி வருகிறது. இதன் காரணமாக வினாடிக்கு 769 கன அடி நீர் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால் வைகை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
கால்நடைகளை பாதுகாப்பாக பராமரிக்கவும் கால்நடைகளை ஆற்றல் இறங்க வேண்டாம் எனவும் ஆட்சியர் சங்கீதா எச்சரிக்கை விடுத்துள்ளார். குளிக்கும்போது துணி துவைக்கவும் ஆற்றில் இறங்க வேண்டாம் என்றும் தொடர்ந்து அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





