முறைகேடாக சேர்க்கப்பட்ட சொத்து பறிமுதல்..!
வருமானத்திற்கு அதிகமாக சேர்க்கப்பட்ட சொத்தை பறிமுதல் செய்து அரசுடைமையாக்க சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. மத்திய சென்னை பதிவுத்துறையில் தணிக்கை பிரிவில் அண்ணாநகரை சேர்ந்த சந்திரசேகரன் மாவட்ட பதிவாளராக 1991 முதல் 2000 ஆம் ஆண்டு வரையில் பணியாற்றி வந்தார்.
அப்பொழுது வருமானத்தை விட அதிகமாக 20 லட்சம் ரூபாய்க்கு சொத்தை சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு துறையினர் 2006 ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்தனர். வழக்கை விசாரித்த சென்னை சிறப்பு நீதிமன்றம் முன்னாள் மாவட்ட பதிவாளர் சந்திரசேகரன் அவரது மனைவி லதாவிற்கு நான்காண்டுகள் சிறை தண்டனையும் தலா ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





