--- --:--:-- --

கையைப்பிடித்துக் கொண்டு மகிழ்ச்சியாக பேசிய ரஜினிகாந்த்..!

1

சென்னை அப்போலோ மருத்துவமனையில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் தனது கையைப் பிடித்துக் கொண்டு மகிழ்ச்சியாக பேசியதாக இதயவியல் மருத்துவர் சொக்கலிங்கம் கூறியுள்ளார்.

 

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (73), தற்போது ‘கூலி’ படத்தில் நடித்து வருகிறார். இதற்காக விசாகப்பட்டினத்தில் நடந்து வரும் படப்பிடிப்பில் கலந்து கொண்ட ரஜினி, கடந்த சில நாட்களுக்கு முன்புதான் சென்னை திரும்பினார். இந்நிலையில் செப்.30-ம் தேதி நள்ளிரவு உடல்நலக் குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

அடிவயிறு பகுதியில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் எனக் கூறப்பட்டது. தொடர்ந்து, இதயத்தில் இருந்து பிரியும் இரத்த நாளத்தில் வீக்கம் இருந்ததால் TRANSCATHETER முறையில் ஸ்டென்ட் பொருத்தி வீக்கத்தை நிறுத்தியதாகவும், ரஜினிகாந்தின் உடல்நிலை தற்போது சீராகவும், அவர் நலமுடன் இருப்பதாகவும் என்று அப்போலோ மருத்துவமனை அறிவித்தது.

 

ரஜினிகாந்த் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தனது கையைப் பிடித்துக் கொண்டு மகிழ்ச்சியாக பேசியதாக இதயவியல் மருத்துவர் சொக்கலிங்கம் கூறியுள்ளார்.மேலும், ரஜினிக்கு சக்தி அதிகம். இதுவே மற்றவர்கள் என்றால், இந்த சிகிச்சைகளைப் பொறுத்துக்கொள்ள முடியாது என்றும் மருத்துவர் சொக்கலிங்கம் தெரிவித்தார்.

 

அதேபோல், ரஜினி தன்னிடம் மகிழ்ச்சியாக பேசியதாகவும் மருத்துவர் சொக்கலிங்கம் தெரிவித்தார்.மேலும், ரஜினிக்கு சக்தி அதிகம். இதுவே மற்றவர்கள் என்றால், இந்த சிகிச்சைகளைப் பொறுத்துக்கொள்ள முடியாது என்றும் மருத்துவர் சொக்கலிங்கம் தெரிவித்தார். அதேபோல், ரஜினி தன்னிடம் மகிழ்ச்சியாக பேசியதாகவும் மருத்துவர் சொக்கலிங்கம் தெரிவித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon