--- --:--:-- --

இனி தமிழ்நாட்டு மக்களுக்காக உழைப்போம் – தவெக தலைவர் விஜய்

1

சென்னை பனையூரில் உள்ள அலுவலகத்தில் தமிழக வெற்றிக் கழக கட்சியின் கொடியை நடிகரும், அக்கட்சியின் தலைவருமான விஜய் ஏற்றி வைத்தார்.

 

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி, பனையூரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் இன்று (ஆக.22) நடைபெற்றது. பனையூர் அலுவலகத்திற்கு தவெக தலைவர் விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் அவரது தாய் ஷோபா காலை 8 மணி அளவிலேயே வருகை தந்தனர்.

 

பின்னர், நடிகர் விஜய் தனது இல்லத்தில் இருந்து காலை 9 மணிக்கு இன்னோவா வாகனத்தில் புறப்பட்டு பனையூர் கட்சி அலுவலகத்திற்கு வந்தடைந்தார். வெள்ளை சட்டை மற்றும் காக்கி நிற பேண்ட் அணிந்தி விஜய் வந்திருந்தார். கட்சி அலுவலகத்திற்கு வந்த விஜய், கட்சி நிர்வாகிகளுடன் அமர்ந்தார்.

 

பின்னர் தனது தந்தையை கட்டி அணைத்து வரவேற்று, பின் மேடைக்குச் சென்றார்.இதையடுத்து 2026ஆம் ஆண்டில் இலக்கை அடைய உண்மையாக உழைப்போம், உறுதியாக அடைவோம் என நெஞ்சில் கை வைத்து விஜய் உறுதி மொழி ஏற்க தொண்டர்களும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.இதனைத் தொடர்ந்து மேடையில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை நடிகர் விஜய் அறிமுகம் செய்து வைத்தார்.

 

கொடியில் மேலும் கீழும் ரத்தச் சிவப்பு நிறமும், மையப் பகுதியில் மஞ்சள் நிறமும் இடம்பெற்றுளளன. கொடியின் நடுவில் வாகைப்பூவும் அதன் இருபுறமும் காலை உயர்த்திய இரு போர் யானைகளும் இடம்பெற்றுள்ளன.

 

மேலும் 28 நட்சத்திரங்களும் கட்சிக் கொடியை அலங்கரிக்கின்றன. பின்னர் கட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டிருந்த கொடிக் கம்பத்தில் தமிழக வெற்றிக் கழக கட்சியின் கொடியை நடிகர் விஜய் ஏற்றி வைத்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon