24 மணி நேரத்திற்கு மருத்துவ சேவைகள் வழங்கப்படாது.. நாடு தழுவிய போராட்டம் அறிவிப்பு..!
கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து இந்திய மருத்துவ கூட்டமைப்பு நாடு தழுவிய பணி புறக்கணிப்பு போராட்டம் அறிவித்துள்ளது.
ஆகஸ்ட் 17ஆம் தேதி சனிக்கிழமை காலை 6:00 மணிக்கு தொடங்கி பதினெட்டாம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி வரை நாடு முழுவதும் 24 மணி நேரத்திற்கு மருத்துவ சேவைகள் வழங்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் அத்தியாவசிய மற்றும் அவசர சிகிச்சைகளும் உயிர்காக்கும் அறுவை சிகிச்சைகளும் மேற்கொள்ளப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அதனை தவிர அறுவை சிகிச்சைகள் புறநோயாளிகளுக்கான மருத்துவ சேவைகள் எதுவும் வழங்கப்படாது எனவும் அனைத்து துறைகளுக்கும் இந்த அறிவிப்பு பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





