--- --:--:-- --

குப்பையில் வைர நெக்லஸை கண்டுபிடித்த தூய்மையை பணியாளருக்கு மேயர் பிரியா பாராட்டு..!

5

சென்னையில் குப்பை தொட்டிக்குள் கிடந்த வைர நெக்லஸை கண்டுபிடித்து உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மை பணியாளரை மேயர் பிரியா நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். விருகம்பாக்கத்தில் வசிக்கும் தேவராஜ் என்பவர் ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பிலான வைர நகைகளை தொலைத்துள்ளார்.

 

வீட்டில் சுத்தம் செய்யும் பொழுது குப்பையுடன் நெக்லஸ் இருந்திருக்க கூடும் என்ற சந்தேகத்தில் அந்த தெருவில் உள்ள தூய்மை பணியாளரின் உதவியை நாடியுள்ளார். அங்கிருந்த தூய்மையை பணியாளரான அந்தோணிசாமி குப்பைத்தொட்டி முழுவதும் தேடி அதிலிருந்து வைர நெக்லஸை எடுத்து தேவராஜிடம் ஒப்படைத்துள்ளார்.

 

அந்தோணி சாமியின் இந்த செயலால் சமூக வலைதளங்களில் அது பாராட்டுகளை பெற்றுள்ளது. இந்த நிலையில் அந்தோணி சாமி நேர்மையை பாராட்டும் வகையில் அவரை அழைத்து வாழ்த்து தெரிவித்த மேயர் பிரியா ஊக்கதொகை வழங்கி பெருமைப்படுத்தியுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon