திருவாடானையில் ஆபத்தான பயணத்தை மேற்கொள்ளும் மாணவர்கள்..கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டுகோள்..!
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பேருந்து நிலையத்திலிருந்து தேவகோட்டை, காரைக்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் மூலமாக அங்கு படிக்கும் மாணவிகள் சென்று வருகின்றனர்.
இரண்டு நாட்கள் பள்ளி விடுமுறை முடித்து இன்று பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் அதிகமானோர் இருந்த நிலையில் திருச்சி செல்லக்கூடிய பேருந்தில் அதிகப்படியான மாணவர்கள் படியில் தொங்கியவரே ஆபத்தான பயணத்தை மேற்கொண்டனர்.

இன்று ஆபத்தான பயணத்தால் ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டுவிமோ என்று பெற்றோர்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே வார விடுமுறை முடிந்து மறுநாள் கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. சில பேருந்து ஓட்டுநர்கள் பேரூந்தில் பயணிகள் ஏறுவதற்கு முன்பாகவே வாகனத்தை எடுத்துச் செல்கின்றனர். இதனால் ஆபத்துக்கள் உள்ளது
📱 Share on WhatsApp 𝕏 Share on X




