கங்கை நதியில் குளித்துக் கொண்டிருந்த 4 பேர் நீரில் மூழ்கி பலி..!
பீகாரில் கங்கை நதியில் குளித்துக் கொண்டிருந்த நான்கு பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். பீகார் மாநிலம் பாகல்பூர் மாவட்டம் சேர்ந்த 11 பேர் குளிப்பதற்காக கங்கை நதிக்கு சென்றுள்ளனர். ஆற்றில் இறங்கி குளித்துக் கொண்டிருந்த 11 பேரும் திடீரென நீரோட்டத்தில் அடித்து செல்லப்பட்டனர்.
அவர்களில் ஏழு பேர் பத்திரமாக நிந்தி கரை சேர்ந்தனர். எனினும் நான்கு பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் உயிரிழந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





