ரேஷன் கடையில் மூன்று மாதங்களாக முறையாக பொருட்கள் வழங்கப்படவில்லை.. புகாரளித்த முதியவர்..!
திண்டுக்கல்லில் உள்ள ரேஷன் கடையில் மூன்று மாதங்களாக முறையாக பொருட்கள் வழங்கப்படவில்லை என குற்றம் சாட்டிய முதியவரை ஆட்சியர் கண்முன்னே அதிகாரிகள் மிரட்டியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று குறை தீர்ப்பு நாள் கூட்டம் நடைபெற்றது.
இங்கு வந்திருந்த பூக்கம்பட்டியை சேர்ந்த முதியவர் ரேஷன் கடைகளில் பருப், எண்ணெய், சர்க்கரை உள்ளிட்டவைகளை முறையாக வழங்குவதில்லை என குற்றம் சாட்டினர். கடந்த மூன்று மாதமாக அரிசியை தவிர எந்த பொருட்களும் வழங்கவில்லை என நேரடியாக மாவட்ட ஆட்சியர் பூங்கொடியிடம் தெரிவித்தார்.
அப்பொழுது அருகில் இருந்த அதிகாரி முதியவரை அமரும்படி மிரட்டும் துணியில் செய்கை காட்டினார். இதனால் குறைதீர் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





