வீட்டின் ரகசிய அறைக்குள் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள்..!
ஜம்மு காஷ்மீரில் வீட்டின் அலமாரிக்கு பின்னால் ரகசிய அறைக்குள் பயங்கரவாதிகள் பதுங்கி இருந்த அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது. ஜம்மு காஷ்மீர் குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகளில் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். இரு தரப்பினருக்கும் இடையே பயங்கர துப்பாக்கி சண்டை நடைபெற்றது. இந்த நிலையில் பயங்கரவாதிகள் இருந்த வீட்டில் ராணுவத்தினர் நடத்திய அதிரடி சோதனையில் அவர்கள் வீட்டில் துணி வைக்கும் அலமாரிக்கு பின்னால் ரகசிய அறைகளை அமைத்து பதுங்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





