பள்ளி மாணவர்களை பார்த்து நிற்காமல் செல்லும் அரசு பேருந்துகள்..!
செங்கல்பட்டு அருகே பேருந்து நிலையத்தில் நிற்காமல் சென்ற அரசு பேருந்தால் பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர். திருவள்ளுவர் பகுதிகளுக்கு சிங்கப்பெருமாள் கோவில் ஆத்தூர் வழியாக அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இந்த நிலையில் பேருந்து நிலையத்தில் நிற்காமல் சென்ற அரசு பேருந்துகளால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர். இதன் காரணமாக ஆபத்தான முறையில் தனியார் பேருந்துகளில் தொங்கியபடி சில மாணவர்கள் செல்லப்பட்டுள்ளனர்.
எனவே இது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க மாணவ, மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





