திருச்சியில் அதிவேகத்தால் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதியதில் ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் நொறுங்கி சேதமடைந்தன. திருச்சி தலைமை தபால் நிலையம் சிக்னலில் ஜங்ஷன் ரயில் நிலையம் பகுதியில் இருந்து வந்த சென்னை பதிவெண் கொண்ட பென்ஸ் கார் வேகமாக கடக்க முயன்றது.
அப்பொழுது ரட் சிக்னல் விழுந்ததால் காரின் வேகத்தை குறைக்க முடியாமல் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் முன்புறம் சென்ற ஆட்டோ மற்றும் டூவீலரில் மோதி நின்றது. இந்த சம்பவத்தில் பென்ஸ் காரின் முன்புறம் சேதம் அடைந்தது.
இந்த விபத்தில் ஆட்டோ டிரைவர் ஆரோக்கியதாஸ் டூவீலரில் நின்று கொண்டிருந்த ரோகன் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. விபத்துக்குள்ளான பென்ஸ் கார் நேற்று மாலை திருச்சி விமான நிலையத்திற்கு வரவிருந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலினை அழைப்பதற்காக வந்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக திருச்சி கன்டோன்மென்ட் போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் செய்திகள் :
தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: காந்தி பெயரை நீக்கிய மத்திய அரசு - பெ.சண்முகம் கண்டனம்
ஈரோட்டில் விஜய் பிரச்சாரம் - தனியார் பள்ளிக்கு விடுமுறை அறிவிப்பு
தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியல் டிச.19ம் தேதி வெளியாகும் என அறிவிப்பு..!
திருவள்ளூரில் பள்ளி சுற்றுசுவர் விழுந்து உயிரிழந்த மாணவர் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க முதல்வர் உத...
பாமக மாநில நிர்வாகக்குழு கூட்டம் நாளை நடைபெறுகிறது!
இன்று இரவு வெளுத்து வாங்கப் போகும் கனமழை..!






