பெட்ரோல் குண்டு வீசிய ரவுடிகளுக்கு மாவுக்கட்டு போட வைத்த போலீஸ்..!

சென்னை டிபி சத்திரத்தில் கஞ்சா புழக்கம் குறித்து போலீசில் தகவல் தெரிவித்த பெண்ணை குறி வைத்து பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் நேற்று கைது செய்யப்பட்ட இரண்டு பேர் வலது காலில் மாவுக்கட்டுடன் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

 

இன்று ராணிப்பேட்டை அருகே பதுங்கி இருந்த சந்தோஷ், மனோஜ் ஆகிய இருவரையும் தனிப்படை போலீசார் துரத்தி பிடித்த பொழுது சுவர் ஏறி குதித்ததால் வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.