சீர்காழியில் பொது மக்களை கடிக்கும் வெறி நாய்கள்..!
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் பொதுமக்களை தெருநாய்கள் கடித்து காயப்படுத்துவதாக புகார் எழுந்தது. நாய்கள் கடித்ததால் காயம் அடைந்த நான்கு பேர் சீர்காழி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.
தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





