துப்பட்டாவல் கைகளை கட்டி கடலில் குதித்த பதின் பருவ காதலர்கள்..!
சென்னை திருவொற்றியூர் அடுத்த மாத்தூர் எம்எம்டிஏ காலனி பகுதியை சேர்ந்த கிரன் குமார் என்பவர் தனியார் வங்கியில் உதவி மேலாளராக பணியாற்றி வருகிறார். பத்தாம் வகுப்பு படித்து வந்த இவரது மகன் 15 வயது சிறுமியை காதலித்ததாக தெரிகிறது.
கடந்த ஏழு மாதங்களாக காதலித்து வந்துள்ளனர். பின்னர் தங்களின் காதல் குறித்து பெற்றோரிடத்தில் கூறியுள்ளனர். முதலில் இருவரும் நன்றாக படியுங்கள் என பெற்றோர் அறிவுரை கூறியுள்ளனர். இருவரும் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
காலையில் குழந்தைகள் வீட்டில் இல்லாததை கண்ட பெற்றோர்கள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். மாதவரம் பால் பண்ணை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. செல்போன் டவர் லொகேஷன் கொண்டு தேடிய பொழுது திருவொற்றியூர் கடற்கரையில் சிக்னல் கிடைத்துள்ளது.
உடனடியாக கடற்கரைக்கு சென்ற போலீசார் தேடிப் பார்த்தபோது தண்ணீரில் இருவரது சடலம் மிதந்து கொண்டிருப்பதை கண்டனர். துப்பட்டாவால் இருவரின் கைகளை கட்டிக்கொண்டு கடலில் குதித்ததும் தெரிய வந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





